தேசிய நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் பலி
தேசிய நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் பலி. நிற்காமல் சென்ற வாகனத்திற்கு போலீசார் வலை
திருச்சி, ஜன.13 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மதுரை to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செவந்தாம்பட்டி பிரிவு அருகே இன்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் மதுரை மாவட்டம் மறைமலைபட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துப்பாண்டி (36) என்பவரின் இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பலத்த வேகத்தில் மோதியுள்ளது.இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதையடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.