இளைஞரின் பைக்கை திருடிய மர்ம நபர்கள்
திருச்சி, ஜன.31 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தண்ணீர்பந்தலில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் நிறுத்தியிருந்த மோட்டார் பைக்கை திருடி சென்ற மர்ம நபர்கள். காவல் நிலையத்தில் புகார் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை.
லால்குடி அருகே நன்னிமங்கலம் புது காலனியைச் சேர்ந்தவர் விஜய் (21). இவர் லால்குடி சிவன் கோவில் அருகில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தண்ணீர்பந்தலில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் தனது சகோதரனின் மோட்டார் பைக்கை நிறுத்திவிட்டு கொள்ளிடம் ஆற்றுக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் பைக் மாயமாகி இருந்தது. மர்ம நபர்கள் யாரோ மோட்டார் பைக்கை திருடிச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் பல்வேறு பகுதிகளில் மோட்டார் பைக்கை தேடி உள்ளார்.ஆனால் எங்கும் கிடைக்காத நிலையில் லால்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் லால்குடி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து மோட்டார் பைக்கை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.