மாணவர்களுக்கு தொழில்- வாழ்க்கை வழிகாட்டி நிகழ்வு
திருச்சி, பிப்.1 திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஹோப் வேர்ல்ட் வைட் இல்லத்தில் மாணவர்களுக்காக திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியின் முதுகலை சமூகப்பணித்துறை சார்பில் தொழில் மற்றும் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்வு ” Life to Life”என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இல்லத்தின் இயக்குநர் மற்றும் மேலாளர்சுரேஷ் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சமூக ஆர்வலர் மற்றும் இளம் தொழில் அதிபர் மணிவேல் அண்ணாதுரை சிறப்புரை ஆற்றினார்.இந்நிகழ்வு முனைவர் சாம்சன் வழிகாட்டுதலின் கீழ் முதுகலை சமூகப்பணித்துறை முதலாம் ஆண்டு மாணவர் நெ.கவிமாறன் என்பவரால் நடைபெற்றது.