சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

0 341
Stalin trichy visit

திருச்சி,பிப்.1 திருச்சி மாவட்டம்,  மணப்பாறையில் சாலை பாதுகாப்பு மாதவிழாவை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

ஜனவரி 15ம் தேதி முதல் பிப்ரவரி 14 ம் தேதி வரை 35 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகத்தின் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பொத்தமேட்டுப்பட்டியில் இருந்து துவங்கிய பேரணியை மணப்பாறை டிஎஸ்பி ராமநாதன், போக்குவரத்து ஆய்வாளர் சத்யா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். திருச்சி சாலை, மாரியம்மன் கோவில், புதுத்தெரு, பேருந்து நிலையம் வழியாகச் சென்று மாகாளிபட்டியில் உள்ள வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. பேரணியில் போக்குவரத்து போலீசார் மற்றும் மணப்பாறை பகுதி இருசக்கர வாகன விற்பணை மையங்களைச் சேர்ந்த பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பேரணியின்போது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கும் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அமல்படுத்தப்பட்டுள்ள அபராத தொகை குறித்த விபரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.