அரசுப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை

0 238
Stalin trichy visit

அன்பில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ. 61.24 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை சட்டமன்ற உறுப்பினர்  தொடங்கி வைத்தார்

திருச்சி, பிப். 1 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 61.24 லட்சம் மதிப்பில் 3 புதிய வகுப்பறைகள் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை சட்டமன்ற உறுப்பினர்  சௌந்தர பாண்டியன் இன்று காலை 10:30 மணியளவில் தொடங்கி வைத்தார்.

லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளிக்கு பொதுப்பணித்துறை நிதியின் கீழ் ரூ.61.24 லட்சம் மதிப்பில் மூன்று புதிய வகுப்பறைகள்
கட்டிடம் கட்டுவதற்க்கான பூமிபூஜை நடைப்பெற்றது. இந்த கட்டிடம் கட்டுவதற்க்கான பூமிபூஜையை லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி பெறியாளர் ஊராட்சி மன்ற தலைவர்கள் பவித்ரா காந்தி, ‘வீரமணி, ‘சுதா சித்திரச் சேனன் ,பள்ளி தலைமை ஆசிரியர் , இருபால் ஆசிரியர்கள், திமுக நிர்வாகிகள் , பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.