திருச்சி முக்கொம்பு வந்தடைந்த காவிரி நீர்

0 757
Stalin trichy visit

மேட்டூர் அணை தண்ணீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதனால் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

 

அந்த வகையில்இவ்வாண்டு ஜீன் 12 அன்று  மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 3ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பின் அடிப்படையில் கடந்த 12 ஆம் தேதி மேட்டூர் அணையை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அவ்வாறு திறக்கப்பட்ட நீர் கடைமடை வரை முழுமையாக சென்று சேரும் வகையில் டெல்டா மாவட்டங்களில்ரூபாய்  65.11 கோடி மதிப்பீட்டில் 647 பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.இந்த சூழலில் வினாடிக்கு  3000 கன அடி என்ற அளவில் காவிரி ஆற்றில்  திறக்கப்பட்ட நீர் இன்று அதிகாலை மூன்று மணிக்கு திருச்சி மாவட்டம் முக்கொம்பை  வந்தடைந்தது. தற்போது சுமார்  1800 கன அடி நீர்  திருச்சி மாநகர எல்லையான கம்பரசம்பேட்டை வந்தடைந்த காவிரி நீர் இன்று மாலை அல்லது இரவுக்குள் கல்லணையை சென்றடையும் என ஆற்று பாதுகாப்பு கோட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.