பத்ரகாளியம்மன் கோவிலில் முதலமைச்சரின் அன்னதானத் திட்டம் துவக்கம்

0 436
Stalin trichy visit

மணப்பாறை அருகே பழைமையான பத்ரகாளியம்மன் கோவிலில் முதலமைச்சரின் அன்னதானத் திட்டம் துவக்கம்.

மணப்பாறை அருகே மட்டப்பாறைபட்டியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. நூற்றாண்டு பழைமை வாய்ந்த இக்கோவிலில் தமிழக முதலமைச்சரின் அன்னதான திட்டம் துவக்க விழா நடைபெற்றது. முன்னதாக பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடும் நடந்தது. இதனைத்தொடர்ந்து அன்னதானக்கூடத்தை சீர்மரபினர் நல வாரிய அரசுசாரா உறுப்பினர் பண்ணப்பட்டி கோவிந்தராஜன், வீரப்பூர் ஜமீன்தார் பொன்னழகேசன் ஆகியோர் திறந்து வைத்தனர். இத்திட்டத்தின் கீழ் தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதில் கோவில் செயல்அலுவலர் கண்ணன், ஆய்வாளர்கள் வினோத்குமார், விஜயகுமார், வையம்பட்டி வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் சீரங்கன்,‌மற்றும் கோவில் பணியாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.