கிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி

0 290
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி தலைமை ஏற்று நடப்பு நிதி ஆண்டில் உள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். உழவர் பயிற்சி நிலையம் வேளாண்மை அலுவலர் புவனேஸ்வரி உயிர் உரங்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் பயன்பாடுகள் குறித்து உரை ஆற்றினார். பட்டுப்புழு வளர்ப்பு குறித்து உதவி ஆய்வாளர் ஹேமலதா உரை ஆற்றினார், தோட்டக்கலை துறையின் திட்டங்கள் குறித்து தோட்டக்கலை அலுவலர் சுரேஷ் உரை ஆற்றினார். வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள திட்டங்கள் குறித்து உதவி பொறியாளர் பிரசாந்த் உரை ஆற்றினார். கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து கால்நடை மருத்துவர் தீபா உரை ஆற்றினார். விதை சான்றளிப்பு குறித்து விதை சான்று அலுவலர் ரமேஷ் உரை ஆற்றினார். துணை வேளாண்மை அலுவலர் சின்ன பாண்டி நன்றி உரை ஆற்றினார்

Leave A Reply

Your email address will not be published.