திருச்சியில் அனைத்து வசதிகள் கொண்ட மறுவாழ்வு மையம்
திருச்சியில் அனைத்து வசதிகளுடனும் மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.
முதுகுத்தண்டு மற்றும் மூளை – நரம்பியல் பாதிப்புகளிலிருந்து மீண்டு மறுவாழ்வு பெறுவதை குறிக்கோளாக கொண்ட பிரத்யேக மறுவாழ்வு மையமாக ஹம்சா இயங்கி வருகிறது. தமிழ்நாட்டின் பிரபல மருத்துவமனையான காவேரி மருத்துவமனையுடனான கூட்டாண்மையில் உள்நோயாளிகளுக்கான 30 படுக்கை வசதிகளுடன், சென்னை மாநகரில் 2019-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் விரிவான, முழுமையான மறுவாழ்வு சேவை மையமாக தொடங்கப்பட்டது. இப்போது S சேவை மையங்களாக இது வளர்ச்சி கண்டிருக்கிறது. இவற்றுள் 4 மையங்கள் ராயப்பேட்டை, புளியந்தோப்பு, கீழ்பாக்கம் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (ஓஎம்ஆர்), சென்னையிலும் மற்றும் வேலூரில் ஒரு மையமும் அமைந்துள்ளன. முதுகுத்தண்டு காயம், மூளைக்காயம், பக்கவாதம், முதுகு மற்றும் கழுத்து வலி, எலும்பியல் பாதிப்புகள், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் ஆகியவற்றால் அவதியுறும் நோயாளிகளுக்கு உள்நோயாளி, வெளி நோயாளி, வீட்டிலேயே சிகிச்சை மற்றும் பகல்நேர (டே கேர்) சேவைகள் ஆகியவற்றை இம்மையங்கள் வழங்கி வருகின்றன. அத்துடன் பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய மறுவாழ்வு மற்றும் குழந்தைகளுக்கான மறுவாழ்வு சேவைகளும் இங்கு வழங்கப்படுகின்றன.
ஹம்சா ரீஹேப் -ன் 6வது மையம், 2024 திருச்சி மாநகரில் திறக்கப்படுகிறது. திருச்சியில் இவ்வகையினத்தில் முதன் முறையாக தொடங்கப்படும் இதில், இயன்முறை சிகிச்சை நிபுணர்கள், பணி சார்ந்த சிகிச்சையாளர்கள், உளவியல் மருத்துவர்கள், பேச்சு சிகிச்சை நிபுணர்கள், செயற்கை கால் | சிறப்பு காலணிகள் செய்வோர், தொழில்முறை பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள், சமூகப் பணியாளர்கள் மற்றும் மறுவாழ்வுடன் தொடர்புடைய சிறப்பு நிபுணர்கள் என பலவகை சேவை வழங்குனர்களும் இம்மையத்தில் ஒரு அமைவிடத்தின் கீழ் சேவை வழங்கவிருக்கின்றனர். மருத்துவரது வழிகாட்டல் மற்றும் தலைமையின் கீழ் இயங்கும் இதில், மறுவாழ்வுத்துறை சிறப்பு நிபுணர்கள் மற்றும் மூளை நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள், மூளை நரம்பியல் மருத்துவர்கள், சிறுநீர் பாதையியல் நிபுணர்கள், உளவியலாளர்கள், பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை மருத்துவர்கள், காது மூக்கு தொண்டை சிறப்பு நிபுணர்கள் மற்றும் பிரத்யேக பயிற்சி பெற்ற செவிலியர்கள் ஆகியோர் பணியாற்றுகின்றனர். மூச்சுப் பெருங்குழாய் துளைப்பு, PEG உணவூட்டல், சிறுநீர் வெளியேற்றத்திற்கான கதீட்டர், சேவை தேவைப்படும் நோயாளிகள் மற்றும் மூளை நரம்பியலில் சிக்கலான பிரச்சனைகள் உள்ள நோயாளிகள் என அனைவருக்கும் உகந்த சிகிச்சையளித்து, அவர்கள் மறுவாழ்வு பெற்று இயல்புநிலைக்குத் திரும்ப தேவையான அனைத்து சாதனங்களும், வசதிகளும், இம்மையத்தில் நிறுவப்பட்டுள்ளன.
மறுவாழ்வு செயல்திட்டங்களுக்கும் கூடுதலாக விழுங்குவதற்கான சிகிச்சை. ஒலியியல், வாழ்க்கைத்தொழில் சார்ந்த சிகிச்சை, ஆற்றுப்படுத்தல், சமூகப் பணி, அறிவுத்திறன் சிகிச்சை, உளவியல் மற்றும் உடல் எடை குறைப்பு செயல்திட்டம் ஆகியவைகளும் இம்மையத்தில் வழங்கப்படுகின்றன. மதியிறுக்க கோளாறு (ஆட்டிசம்), மூளை பாதிப்பு, ADHD, அறிவுத்திறன் மற்றும் நடத்தைசார் கோளாறு போன்ற பாடுப்பு நிலைகளில் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு பிரத்யேக மருத்துவக்குழு இங்கு செயலாற்றும், பலவேறு இறனிழப்புகள் உள்ள குழந்தைகளுக்காக பிரத்யேக செயல்திட்டங்களையும் நாங்கள் மேற்கொள்வோம். உடல்எடை குறைப்பு, மாதவிடாய்க்கு பிறகு ஏற்படும் பிரச்சனைகள், பிரசவத்திற்கு முந்தைய உடற்பயிற்சிகள் மற்றும் இடுப்புக்கூடு பகுதியை வலுப்படுத்துவதற்காக பிரசவத்திற்குப் பிந்தைய உடற்பயிறசிகள், சிறுநீர் அடக்க இயலாமை மீது மேலாண்மை மற்றும் மலட்டுத்தன்மைக்கான சிகிச்சை உட்பட மகளிருக்கான நலவாழ்வு திட்டங்களும் ஹம்சா மையத்தில் வழங்கப்படும்.
ஹம்சா ரீஹேப் -ன் நிர்வாக இயக்குனர் டாக்டர். ஜி. பாலமுரளி, இம்மையம் தொடங்கப்படுவது குறித்து கூறியதாவது: “காவிரி டெல்டா பிராந்தியத்தில், சுகாதார சிகிச்சைக்கான மையமாக திருச்சி நிகழ்கின்ற போதிலும், இதுவரை விரிவான சேவை வழங்கும் ஒரு முழு அளவிலான மறுவாழ்வு மையம் இல்லாத குறை இருந்தது. திருச்சியின் மக்கள்தொகை அதிகரித்து வருகின்ற நிலையிலும் மற்றும் மூளை, முதுகுத்தண்டு, ஏலும்பியல், இதயவியல், கர்ப்பநிலை, குழந்தைகள் மற்றும் முதியோருக்கான பராமரிப்பு, அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு ஆகியவை உட்பட, பலவேறு சிறப்பு பிரிவுகளிலும் மறுவாழ்வு சிகிச்சைக்கான தேவை அடுகரித்து வருகின்ற நிலையில், ஹம்சா இங்கு தொடங்கப்படுகிறது. 2019-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே, மறுவாழ்வு சிகிச்சையில் உயர்தர சேவையை கட்டுபடியாகக்கூடிய மிதமான கட்டணத்தில் வழங்கி வந்திருக்கும் ஹம்சா, திருச்சியிலும் அச்சேவை பிரிவில் புதிய பாதையை அமைக்கிறது. 5 மையங்களில் கிடைத்த வெற்றியைத் தொடரந்து, திருச்சியில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த மையமும் இப்பிராந்தியத்தின் சமூகத்தினர் மத்தியில் மிகப்பெரிய ஆழமான தாக்கத்தை நிச்சயம் உருவாக்கும் என்று தெரிவித்தார்