இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

0 257
Stalin trichy visit

திருச்சி, பிப். 6 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள காளவாய்ப்பட்டியில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் கடந்த 1 ந்தேதி வீட்டிற்கு வந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள காளவாய்ப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம்.இவருடைய மகன் மணி (24) என்கின்ற தினேஷ். இவர் கடந்த 4 வருடத்திற்கு முன்பு ஐடிஐ முடித்துள்ளார். பின்னர் தினேஷ் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுகனூர் அருகே ஆயக்குடியில் உள்ள மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.கடந்த 1 ந்தேதி காளவாய்ப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு திணேஷ் வந்துள்ளார். அப்போதிலிருந்து சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த்தாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் தனது வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.