திருச்சி மாநகரில் 18 இடங்களில் இன்று காய்ச்சல் சிறப்பு முகாம்
திருச்சி, பிப். 6 திருச்சி மாநகராட்சி அலுவலகம் இன்று பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பொதுமக்கள் நலனை முன்னிட்டு பீரங்கி குளம், பீமநகர், புத்தூர், உறையூர், ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், தெப்பக்குளம், எடமலைப்பட்டி புதூர், உள்ளிட்ட 18 இடங்களில் (06. 02. 24) மாலை 2 மணி முதல் 6 மணி வரை காய்ச்சல் முகாம் நடைபெறும் என்றும் மக்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.