சமையல் செய்யும் போது தீப்பற்றியதில் பெண் உயிரிழப்பு

0 355
Stalin trichy visit

திருச்சி, பிப். 6  திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே நம்புக்குறிச்சியில் கடந்த 4 ம் தேதி வீட்டில் சமையல் செய்ய மண்ணெண்ணை ஊற்றி அடுப்பை பற்ற வைத்த போது பெண் மீது தீப்பற்றியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சிறுகனூர் அருகே நம்புக்குறிச்சி காலனி தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி சாந்தி (43). இவர்கள் கடந்த 20 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சாந்தி சமையல் செய்வதற்காக தனது வீட்டில் மண்ணெண்ணை ஊற்றி அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாந்தி மீது தீப்பற்றியது. இதில் வலியால் அலறி துடித்து படுகாயமடைந்த சாந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் .அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காணக்கிளியநல்லூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.பின்னர் இச்சம்பவம் குறித்து காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.