புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் : எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
திருச்சி, பிப்.19 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் விரகாலூர் ஊராட்சியில் ரூ.10.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை லால்குடி எம்எல்ஏ சவுந்திரபாண்டியன் திறந்து வைத்தார்..
புள்ளம்பாடி ஒன்றியம் விரகாலூர் ஊராட்சியில் ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நிதியின் கீழ் ரூ.10.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தினை லால்குடி எம்எல்ஏ செளந்திரபாண்டியன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.இதனைத் தொடர்ந்து அங்கன்வாடி மையத்தை மாணவ,மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இந்நிகழ்ச்சியில் புள்ளம்பாடி ஒன்றியக்குழு தலைவர் ரசியாகோல்டன்ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் , ஊராட்சி மன்ற தலைவர் , துணைத்தலைவர் , வார்டு உறுப்பினர்கள் , திமுக நிர்வாகிகள் ,பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.