சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பவுணர்மி தரிசனம் நேரம் அறிவிப்பு

0 287
Stalin trichy visit

திருச்சி, பிப். 23  திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாத பௌணர்மி நேர தரிசனம் இன்று 23 ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.55 மணிக்கு தொடங்கி நாளை 24 ந்தேதி சனிக்கிழமை மாலை 6.51 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பவுணர்மி  தரிசனம் செய்யலாம் என கோயில் இணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்து பெற்ற ஸ்தலமாகும். அம்மனை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பவுணர்மி, அமாவாசை போன்ற தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். மேலும் அமாவாசை பவுணர்மி தினங்களில் இரவில் கோயில் வளாகத்தில் தங்கி அதிகாலையில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்நிலையில் இந்த மாத பௌணர்மி இன்று 23 ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.55 மணிக்கு தொடங்கி நாளை 24 ந்தேதி சனிக்கிழமை மாலை 6.51 மணிக்கு முடிகிறது. எனவே இந்த நேரத்தில் பக்தர்கள் பவுணர்மி  தரிசனம் செய்யலாம் என கோயில் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.