குமுளூர் அரசு கல்லூரியில் புதிய வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை

0 314
Stalin trichy visit

திருச்சி, பிப். 24 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.84 லட்சம் மதிப்பில் 3 புதிய வகுப்பறைகள் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை சட்டமன்ற உறுப்பினர்  சௌந்தர பாண்டியன்  நேற்று தொடங்கி வைத்தார்.

லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடி ஒன்றியம் குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பொதுப்பணித்துறை நிதியின் கீழ் ரூ. 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய வகுப்பறைகள் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜையில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர்  சௌந்தரபாண்டியன் கலந்து கொண்டு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் புள்ளம்பாடி ஒன்றிய குழு தலைவர் ரஷ்யா ராஜேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி துணை தலைவர், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.