முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் 31ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

0 263
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 5  முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம்  31ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

திமுகவை வளர்த்தவர்களில் ஒருவரும் கழக மூத்த முன்னோடியும் மேனாள் அமைச்சரும்  ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் செயலாளருமாக இருந்து மறைந்த புரவலர் அன்பில் தர்மலிங்கம்  31 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள அன்பில் சிலைக்கு   மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்வில் மாநகர செயலாளர் மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர் வன்னைஅரங்கநாதன் சேகரன் சபியுல்லா கோவிந்தராஜன் குணசேகரன் மாமன்ற உறுப்பினர் செந்தில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன் மூக்கன் லீலாவேலு பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம் தர்மராஜ் மோகன் விஜயகுமார் ராஜ்முஹம்மது மணிவேல் பாபு சிவக்குமார் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமை செயற்குழு,  பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், கிளை, வட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.