மகளிர் சுய உதவி குழு மூலம் நடத்தப்படும் மசாலா தொகுப்பினை பார்வையிட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்

0 32
Stalin trichy visit

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழு மூலம் நடத்தப்படும் மசாலா தொகுப்பினை வேளாண் கல்லூரி மாணவிகள் பார்வையிட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள  வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் மாணவிகள் கிராமப்புற வேளாண் பணி அனுபவத்திட்டத்தின் கீழ் நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள மேலப்பூவனூர், கோவில் வெண்ணி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் தங்கி பல்வேறு களப்பணிகள் ஆற்றி வருகின்றனர்.இதில் சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகள் குறித்த செய்திகளை மாணவிகள் தொகுத்து விவசாயிகள் பயன்படுத்தும் தொழில்நுட்ப முறைகள் குறித்தும் விவசாய பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக மகளிரால் நடத்தப்படும் மசாலா தொகுப்பிற்குச் சென்று அதன் விவரங்களையும் கேட்டறிந்தனர் . மூன்று சுய உதவிக் குழுக்களில் இருந்து 6 பெண்கள் மூலமாக கோவில் வெண்ணி ஊராட்சியில் நடத்தப்படுகிறது. இதற்கான செயல்முறை விளக்கங்களை NIFTEM தொழில்நுட்ப மூலமாக பயிற்சி பெற்றுள்ளனர்.

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு(IFFCO) நிறுவனத்தால் உர சீர்திருத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கோவில் வெண்ணி இயற்கை விவசாய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நானோ யூரியா, நானோ டிஏபி, நேனோ காப்பர் பயிர் விளைச்சலில் இதன் பயன்பாடுகளையும் முக்கியத்துவத்தையும் விளக்கி உரைத்தனர். இதில் கீழ்வேலூரில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவிகள் பங்கேற்று உயிரின சிதைப்பான், நானோ உரங்கள் முக்கியத்துவத்தின் ஆலோசனைகளை பெற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.