இலாபகரமான கோழி வளர்ப்பு குறித்த பண்ணை பள்ளி பயிற்சி

0 429
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 22  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் கிராமத்தில் இலாபகரமான கோழி வளர்ப்பு பற்றிய பண்ணை பள்ளி வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் இன்று காலை 11 மணியளவில் பயிற்சி நடைப்பெற்றது.

இந்த பண்ணை பள்ளியின் இரண்டாம் வகுப்பில் கால்நடை மருத்துவர் டாக்டர். செந்தில்குமார் கோழி வளர்ப்பு முறைகள் பற்றி விளக்க உரையாற்றினார். மேலும் கொட்டகை அமைக்கும் முறைகளான கூண்டு முறை மற்றும் திறந்தவெளி முறை பற்றி எடுத்துரைத்தார். மேலும் கோழி குஞ்சுகளை தேர்ந்தெடுக்கும் முறை பற்றி எடுத்துரைத்தார்.

இப்பயிற்சியில் வேளாண்மை அலுவலர் சௌமியா தலைமை வகித்தார். வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் மாநில திட்டங்களை பற்றி எடுத்துரைத்தார். இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை உதவி தொழில்நுட்ப மேலாளர் கௌசிகா மற்றும் ஸ்வேதா ஆகியோர் மேற்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.