திருச்சி மதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

0 309
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 22  திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தலைமையில் திருச்சி தெற்கு மாவட்டக்கழக அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதி, வட்டக் கழக செயலாளர்களும், திருச்சி மாநகரத்திற்குட்பட்ட மாவட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் துரை.வைகோ அவர்கள் தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஆதரவு கோரினார்.

இந்நிகழ்வில் திருச்சி மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்  கே.என்.சேகரன், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மாவட்டக் கழகச் துணை செயலாளர் செங்குட்டுவன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்கள் தி.மு.இராஜேந்திரன், டாக்டர் ரொஹையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.