சேதுராப்பட்டியில் குடிநீர் சுத்திரி நிலையம் திறப்பு ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. நடவடிக்கை

0 712
Stalin trichy visit

திருச்சி அருகே கிராமத்தின் கோரிக்கையை ஏற்று குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் – ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ அசத்தல்

 

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேதுராப்பட்டி கிராம பகுதியில் குடிநீர் உப்பாக இருப்பதாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ அதிகாரிகளுக்கு தெரிவித்தார்

அதனைத் தொடர்ந்து ஜூன் 15ஆம் தேதி அப்பகுதி மக்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு அதனை ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி நேரில் சென்று திறந்து வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வின்போது ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா மற்றும் சேதுராப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.