ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.45 லட்சம் பணம் பறிமுதல்

0 223
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புதுக்குடி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தாமரை செல்வன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக 1,77,300 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதே போல் ஆண்டியகவுண்டம்பட்டியை சேர்ந்த தங்க பாண்டியன் என்பவர் இருசக்கர வகனத்தில் கொண்டு சென்ற ரூ68 ஆயிரத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் பிடித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2,45, 300 ரூபாயை மணப்பாறை வட்டாட்சியர் தனலெட்சுமியிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் இருசக்கர வகனத்தில் பணத்தை கொண்டு வந்தவர்கள் அந்தப் பணம் வங்கியில் நகையை அடமானம் வைத்து எடுத்துச் சென்றதாவும், அதற்கான ஆவணங்கள் அனைத்தும் இருந்தும் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து கொண்டதாகவும் கூறி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் பணத்தை இனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கூறியதை அடுத்து வேதனையோடு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.