ஐஜேகே கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்

0 199
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 25 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூர் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஐ ஜே கே கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

பெரம்பலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் ஐ ஜே கே வேட்பாளர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இந்நிலையில் பெருவளப்பூர் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஐஜே கே கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் நமது வேட்பாளர் பாரிவேந்தரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் அதற்காக நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக களப்பணி ஆற்ற வேண்டும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். வேட்பாளர் தாக்கலையின் போது அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட இணை தலைவர், ஒன்றிய நகர தலைவர் சேகர், வடக்கு ஒன்றிய தலைவர் கணபதி, சங்கேந்தி சுரேஷ் கண்ணன்,தேர்தல் பணிக் குழு கலியமூர்த்தி, தேர்தல் மாவட்ட பணிக்குழு வெற்றி செல்வன், மேற்கு ஒன்றிய தலைவர் செந்தில்,அன்பழகன், ஜெயராஜ், அகரம் சத்தியசீலன் மற்றும் பெருவளப்பூர், நம்புக்குறிச்சி, நெய்குளம்,ஊட்டத்தூர், ரெட்டி மாங்குடி, பி கே அகரம் உள்ளிட்ட ஐஜேகே கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.