இப்தார் நோன்பில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ்

0 237
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 25 திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் வர்த்தகர் நலச்சங்கம் சார்பாக 15 ஆம் ஆண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் தலைமை வர்த்தகர் நலச்சங்க தலைவர் முஸ்தபா, செயலாளர் வர்த்தக நலச்சங்கம் முகமது யூசுப் ஆகியோர் வரவேற்புரையாற்றினார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு டவுன் காஜி ஜலீல் சுல்தான், மாநகரக் கழக செயலாளர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில்பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திக் தாஜுதீன் வட்டக் கழக செயலாளர்கள் மன்சூர் அலி மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் இஸ்லாமிய பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு நோன்பு திறக்கும் நிகழ்வை சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.