திருச்சி மலைக்கோட்டைக்கு விரைவில் ரோப் கார் வசதி – இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டி

0 647
Stalin trichy visit

கல்லணையில் தண்ணீர் திறந்து விடுவதற்காக திருச்சி வருகை புரிந்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் தாயுமானவர் சன்னதி ஆகிய கோவில்களில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு….

 

“தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் தமிழகத்தில் கொரோனா குறைந்து கொண்டு வருகிறது. கொரோனா ஓரிரு வாரங்களில் முழுமையாக குறையும் எனவும், அதனை பொருத்து தமிழகத்தில் உள்ள கோயில்கள் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.  திருச்சி மலைக்கோட்டையில் ரோப் கார் வசதி செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.  விரைவில் அதற்கான  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ரோப் கார் வசதி விரைவில் கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.

இந்துக்களின் முறைவழிப்படு எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் 1956 ம் ஆண்டு சட்டப்படி இந்து அறநிலைய துறை தலையிடலாம் என சட்டம் சொல்கிறது” என கூறினார்.
மேலும் இந்த ஆய்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.