அடியாட்களை வைத்து வீட்டை அபகரிப்பதாக திருச்சி பாலக்கரை பெண் போலீசார் மீது புகார்
திருச்சி மாவட்டம் பாலக்கரை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் பத்மா மற்றும் அவர் கணவர் ஆகியோர் பாலக்கரை பகுதிகளில் வீடு காலி செய்தல், வில்லங்க சொத்துக்களை எடுத்துக் கொடுத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாலக்கரை கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரெங்கராஜன் புகார் மனுவில்…. “எனக்கு எடத்தெரு பாலக்கரை பகுதியில் சொந்தமாக வீடு உள்ளதாகவும், கடந்த 2014ம் ஆண்டு செங்கமலகண்ணன் என்பவர் தன்னுடைய வீட்டை வாங்குவதாக விலை பேசினார். உறவிரான செங்கமலக்கண்ணன் ஒரு நிறுவனத்தில் கடன் கேட்டு இருப்பதாகவும் பணம் வந்தவுடன் வீட்டை தன்னுடைய பெயரில் மாற்றி கொள்வதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி பத்திர பதிவு செய்து கொடுத்ததாகவும் தற்போது செங்கமலக் கண்ணன் தன்னை ஏமாற்றியுள்ளார் எனவும்,
இதில் செங்கமலகண்ணன் பாலக்கரை காவல் நிலையத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் பிரிவில் பணியாற்றும் காவலர் பத்மா உறவினர். இதில் காவலர் பத்மாவின் கணவர் திருவேங்கடம் பாலக்கரை பகுதியில் வில்லங்கமான சொத்துக்களை அவருடைய பெயருக்கு வாங்கி, மனைவி பத்மா உதவியுடன் சொத்தை அபகரிப்பதும், சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்றும், இந்த நிலையில் கடந்த 14ம் தேதி காவலர் பத்மா அவருடைய கணவர் திருவேங்கடம் மற்றும் செங்கமல கண்ணன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து அடியாட்கள் 10 நபர்களையும் வைத்து மிரட்டியதாகவும், இந்த நிலையில் 16ம் தேதி இன்று காலை வீட்டின் பூட்டை உடைத்து அபகரிக்க முயற்சித்துள்ளனர்.

ஏற்கனவே இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை இல்லை என்றும்,
எனவே பாலக்கரை காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் பத்மா மற்றும் அவருடைய கணவர் திருவேங்கடம், செங்கமலகண்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட காவல் ஆணையரிடம் ரெங்கராஜன் புகார் அளித்துள்ளார்.