பைக் மீது கார் மோதிய விபத்தில் நகை தொழிலாளி உயிரிழப்பு

0 383
Stalin trichy visit

திருச்சி, ஏப். 27  திருச்சி மாவட்டம் துறையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (50). இவர் நகை தொழில் செய்து வருகிறார். இதேபோன்று குட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் ரவி (52). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள். இந்நிலையில் இன்று காலை இருவரும் அடிவாரப் பகுதியில் வாக்கிங் செல்வதற்காக தன்னுடைய இருசக்கர வாகனத்தில் துறையூரிலிருந்து அடிவாரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது துறையூர்- பெரம்பலூர் சாலையில் உள்ள தனியார் அரிசி ஆலை அருகே சென்று கொண்டிருந்த பொழுது, எதிர் திசையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று இவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே, துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த ரவியை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். .

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தப்பியோடி கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.