கே.கே.நகரில் வீட்டுக்குள் பிணமாக கிடந்த ஐ.டி. ஊழியர் உடல் மீட்பு

0 240
Stalin trichy visit

 

திருச்சி மே 6 திருச்சி கேகே நகர் உடையான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 40).ஐ டி ஊழியர். இவருக்கு திருமணமாகி மஞ்சு என்ற மனைவியும், குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்க்கு தனது குழந்தையுடன் சென்றுவிட்டார்.

இந்நிலையில் வீட்டில் அரிகிருஷ்ணன் மற்றும் தனியாக இருந்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை உணர்ந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்பொழுது படுக்கை அறையில்
ஹரிகிருஷ்ணன் இறந்து கிடந்ததாக தெரிய வந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உடனடியாக கேகே நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஹரிகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிகிருஷ்ணன் எப்படி இறந்தார்? இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.