தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை மதிப்பீடு செய்வதற்கானது அல்ல: அமைச்சர் அன்பில் மகேஷ்

0 268
Stalin trichy visit

தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை மதிப்பீடு செய்வதற்கானது அல்ல என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் http://tnresults.nic.in மற்றும், http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

இத்தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை மதிப்பீடு செய்வதற்கானது அல்ல! கற்றலை அளவீடு செய்வதற்கான தேர்வு முடிவுகள் மட்டுமே என்பதை மாணவச் செல்வங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்’ என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.