புளியஞ்சோலை சுற்றுலா தளத்தில் நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு
திருச்சி, மே 14 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை சுற்றுலாத்தலத்திற்கு திருப்பூரை சேர்ந்த சிவக்குமார் இவர் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தன் தாய் கங்கேஸ்வரி மற்றும்
திருப்பூரை சேர்ந்த ஆறுமுகம் (வயது 63 ) பாப்பாத்தி (வயது 58 ) சாந்தாமணி (வயது 56 )
ஆகியோருடன் சுற்றுலா வந்துள்ளார் அப்போது சிவகுமார் எதிர்பாராத விதமாக அங்கிருந்த நீரில் தவறி விழுந்துள்ளார் அவரை மீட்ட உறவினர்கள் சோதனை செய்தபோது செய்த போது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்
இதுகுறித்து வனத்துறையினர் சேந்தமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுற்றுலா வந்த இடத்தில் தாய் முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது