மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலில் வேடபரி திருவிழா

0 463
Stalin trichy visit

திருச்சி, மே 14  திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெறும்.

இதே போல் இந்த ஆண்டும் திருவிழா கடந்த மாதம் 28 ம் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வரும் வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் குதிரை வாகனத்தில் வைக்கப்பட்டதும் வேடபரி நிகழ்ச்சி தொடங்கியது. கோவிலில் இருந்து புறப்பட்ட வேடபரி ராஜவீதி, கோவில்பட்டி சாலை வழியாக ஆலயத்தை சென்றடைந்தது. சாமி செல்லும் போதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாலையோரம் காத்திருந்து வழிபட்டனர். முன்னதாக பழைமையான கலைகலான சிலம்பம், தீப்பந்தம் ஆட்டம், தப்பாட்டம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. இதே போல் மணப்பாறை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.