குடிநீரில் கழிவுநீர் கலப்பு : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

0 308
Stalin trichy visit

திருச்சி,மே 27  திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட சேதுரெத்தினபுரம் பகுதியில் இன்று காலை வழக்கம் போல் காவிரி குடிநீர் வந்தது. மக்கள் காவிரி குடிநீரை குடங்களில் பிடிக்க முற்பட்ட போது குடிநீர் கருப்பு நிறத்தில் கழிவு நீருடன் கடும் துர்நாற்றத்தோடு வந்தது. மேலும் தண்ணீரை பிடிக்கும் போது நுரையும் பீறிட்டு வெளியேறியது. இதனால் மக்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகினர். குறிப்பிட்ட நேரம் இதே நிலை தான் நீடித்தது. பிடித்து வைத்த குடிநீர் தெளிந்தாலும் முதலில் அவை கழிவு நீரோடு கலந்து வந்ததால் அதை எப்படி பயன்படுத்த முடியும் என்று வேதனை தெரிவித்த மக்கள் கடந்த 3 மாதமாக இதே நிலை அவ்வபோது ஏற்படுவதாகவும் நகராட்சி நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து முறையான காவிரி குடிநீ;ர கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.