மேஜர் சரவணன் நினைவு நாள் : தி.மு.க. சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை

0 376
Stalin trichy visit

திருச்சி, மே 29 பாகிஸ்தான் நாடு கடந்த 1999 ஆம் ஆண்டு இமயமலை பகுதியிலுள்ள கார்கில் பகுதியை ஆக்கிரமிப்பு செய்தது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. இப்போர் 1999 ஆம் ஆண்டு 3 ஆம் தேதி தொடங்கி 1999 ஜீலை மாதம் முடிவுற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றது.

இப்போரில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணன் போரில் வீரமரணமடைந்தார். மேஜர் சரவணின் 25 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு   திமுக சார்பாக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண் நேரு தலைமையில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே உள்ள மேஜர் சரவணன் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது

இதில் மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.