பைக் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு

0 331
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 3   பைக் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் மோட்டார் பைக் மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர்காமராஜ் (62). இவர் கடந்த 1 ம் தேதி இரவு தனது மோட்டார் பைக்கில் திருச்சி சமயபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா திருவாக்குடி சித்ராம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதிப்குமார் (30) காரில் பின்னால் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள சமயபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற மோட்டார் பைக் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முதியவர் காமராஜ் படுகாயம் அடைந்தார்.விபத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.