முதலமைச்சரை ஜோக்கர் என விமர்சித்த பாஜக பிரமுகர்

0 327
Stalin trichy visit

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பாஜக பிரமுகருமான திருச்சி சூர்யா முதலமைச்சர் மு.க ஸ்டாலினை ஜோக்கர் என விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 40/40 தொகுதிகளை கைப்பற்றி இருக்கும் நிலையில் அது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திருச்சி சூர்யா, “40 வாங்கினாலும் நீங்கள் ஜோக்கர் தான், தனிப் பெரும்பான்மை இல்லை என்றாலும் நாங்கள் ராஜா தான்” என சொல்லி, முதலமைச்சரின் புகைப்படத்தையும் மோசமாக எடிட் செய்து பதிவிட்டுள்ளார்.

பா.ஜ.க. பிரமுகரின் செயல் தி.மு.க.வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.