சமயபுரத்தில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு

0 192
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 5  திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள ஏடிஎம்மின் பக்கவாட்டு பகுதியில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர் இந்த பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்ததாக. கூறப்படுகிறது.
இந்நிலையில் இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.