வளநாடு மாரியம்மன் கோவில் பால்குட விழாவில் பக்தர்களுக்கு தண்ணீர், ஜீஸ் வழங்கிய இஸ்லாமியர்கள்

0 327
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 10  வளநாடு மாரியம்மன் கோவில் பால்குட விழாவில் பக்தர்களுக்கு தண்ணீர், ஜீஸ்  வழங்கிய இஸ்லாமியர்கள்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் பூச்சொரிதல் மற்றும் பொங்கல் விழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா இன்று நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடத்தை தலையில் சுமந்தபடி மாரியம்மன் கோவிலை நோக்கி சென்ற பின் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதே போல் பலரும் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் தங்களின் நேற்றிக்கடனை நிறைவேற்றினர். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் வளநாடு ஜமாத் நிர்வாகத்தின் சார்பில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை மஞ்சள் பையில் வைத்து கொடுத்தனர். மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் அமைந்த இந்த நிகழ்வு ஒற்றுமையை தலைத்தோங்க செய்யும் வகையில் அமைந்திருந்தது.

Leave A Reply

Your email address will not be published.