திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் இயக்கம்: அமைச்சர் அன்பில்மகேஸ் பேச்சு

0 234
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 10  திருச்சி தெற்கு மாவட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சார்பாக நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் மற்றும் இரு பாலருக்கு நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு திருச்சி காவிரி கரை அருகில் அமைந்துள்ள நேஷனல் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது

நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வரவேற்புரையாற்றினார்.  மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் முன்னிலை வகித்தார்.   திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் கழகக் கொள்கை பரப்பு செயலாளர்-கழக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி N.சிவா , கழக செய்தி தொடர்பாளர்-மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி NVNசோமு , பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர்  இக்கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு கலைஞர் புகழ் போற்றி உரையாற்றினார்கள்.

அதனைத் தொடர்ந்து காலை முதல் மாலை வரைநடைபெற்ற இரு பாலருக்கான கால்பந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்

இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், சேகரன், செந்தில், கவிஞர் சல்மா, துணை மேயர் திவ்யா, பகுதி கழகச் செயலாளர் மேகன், மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில்  வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்காக நாங்கள் உழைப்போம். திருச்சி கிழக்கு தொகுதியில் தான் அதிக வாக்குகள் பதிவானது என்பதில் பெருமை கொள்கிறோம்.

மூத்த மக்கள் பிரதிநிதியாக இருக்கும் எங்களது மாமா திருச்சி சிவா இந்நிகழ்வில் பங்கேற்பது தான் சரியாக இருக்கும் என எண்ணினேன் பிறந்தநாளுக்கு அவரை சென்று பார்க்க முடியவில்லை அதனால் இன்று கலைஞரின் ஐந்து கொள்கைகளை அவரிடம் சொல்லி அவருக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கலைஞரின் நூற்றாண்டு நிறைவடைந்தது என்றில்லாமல், கலைஞரின் புகழ் பாட வேண்டும் என்றால் நம் ஆயுட்காலம் முழுவதும் பாடிக் கொண்டே இருக்க வேண்டும்.அதுவே அவருக்கு நாம் செய்கின்ற நன்றி கடனாக இருக்க முடியும். திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அரசியல் கட்சி அல்ல, இது மக்கள் இயக்கம். இந்த இயக்கத்தில் நாங்கள் எல்லாம் மக்களுக்காக இயங்கக் கூடியவர்களாக, உங்களுக்கான சேவகர்கலாகவே நாங்கள் வந்திருக்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.