திருச்சி மாநகராட்சி பள்ளியில் ஆதார் பதிவு செய்யும் முகாம் – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 327
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 10  திருச்சி மாநகராட்சி பள்ளியில் ஆதார் பதிவு செய்யும் முகாம் – அமைச்சர் K.N. நேரு கலந்து கொண்டு துவக்கி வைத்து பார்வையிட்டார்

மாணவர்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்புவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. பயிலும் பள்ளிலேயே ஆதார் பதிவு என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் அப்பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று பல்வேறு பள்ளிகளில் மாணவ பணிகளுக்கு ஆதார் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது

அதே போன்று திருச்சி பீமநகர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் முகாம் , வங்கி கணக்கு, அஞ்சல் கணக்கு தொடங்குவதற்கான பணியினையும் நடைபெற்ற முகாமில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு
தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் , மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.