கோவையில் தி.மு.க. முப்பெரும் விழா: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை

0 357
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 14 திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டள்ள செய்திக்கில் நாளை (ஜூன் 15) மாலை 4 மணி அளவில் கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் – கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றியை அளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, 40 தொகுதிகளை வென்று எடுத்த கழகத் தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு விழா என கழக முப்பெரும் விழாவாக பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் திமுக திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர் – நிர்வாகிகள் அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், மாவட்ட – மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கழகத் தொண்டர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.