திருச்சி விமான நிலையத்தில்  ரூ. 16. 75 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல்

0 228
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 15 திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை செய்தனர். இதில் ஒரு பயணி ரூ.6. 84 லட்சம் மதிப்பிலான அமெரிக்கா, வங்கதேசம் மற்றும் இந்திய பணத்தாள்கள், மற்றொரு பயணி ரூ. 9. 91 லட்சம் மதிப்பிலான 12, 000 அமெரிக்க டாலர்களையும் உரிய அனுமதியின்றி கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.