வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து 5 பவுன் நகை, ரூ.5 லட்சம் திருட்டு

0 204
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 18  திருச்சி மாவட்டம் துறையூர் சௌடாம்பிகா தெருவில் வசிப்பவர் முத்துவீரன் இவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் மாஸ்க் அணிந்துகொண்டு ஐந்து நபர்கள் முத்து வீரனிடம் தாங்கள் வருமான வரி அதிகாரிகள் என்றும் தங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டனர். இதை நம்பிய முத்துவீரன் அவர்களை வீட்டில் உள்ள அனைத்து பீரோக்களையும் திறந்து சோதனை செய்வதற்கு அனுமதித்துள்ளார் மர்ம நபர்கள் சோதனை இடுவது போல் நடித்து பீரோவில் இருந்த ரொக்கம் ஐந்து லட்சம் மற்றும் ஐந்து சவரன் நகையை எடுத்துச் சென்றுள்ளனர்

இதுகுறித்து துறையூர் காவல் நிலையத்தில் முத்துவீரன் விசாரணை செய்த போது வந்தவர்கள் மர்ம ஆசாமிகள் என்றும் அவர்கள் அவரிடம் ரொக்கத்தை கொள்ளையடிப்பதற்காக அதிகாரி போல் நடித்துதாக தெரியவந்தது

இதனை தொடர்ந்து முசிறி டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்ய ப்பட்டது.  மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றி  ஆய்வு செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave A Reply

Your email address will not be published.