பராமரிப்பு பணி: பூவாளூர் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்

0 227
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 17  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்துலிருந்து மின் விநியோகம் பெறப்படும் கீழ்க் கண்ட பகுதிகளான லால்குடி நகர் பகுதியில் அரசு பொதுமருத்துவமனை, நாகம்மையார்தெரு, ராஜேஸ்வரி நகர், சாந்திநகர், நன்னிமங்கலம், பூவாளுர், பின்னவாசல், மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், காட்டூர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனர், பெருவளநல்லுர், இடக்கிமங்களம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி மற்றும் இருதயபுரம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் லால்குடி கோட்டார் செயற்பொறியாளர் அன்பு செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.