உயர் மின்னழுத்த கோபுரம் மீது ஏறி சுயேட்சை வேட்பாளர் போராட்டம்

0 208
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 26 திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றம் அருகே எம்ஜிஆர் சிலை முன்பு அமைந்துள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி காலையிலேயே போராட்டத்தில் துவக்கினார். போராட்டத்திற்கான காரணம் என்னவென்று கேட்ட பொழுது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் ராஜேந்திரன் பத்து ரூபாய் நாணயங்களை கொண்டு வந்து நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய வேட்பு மனுவும் ஏற்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டார். தற்பொழுது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து அதை மட்டும் ஏன் நிராகரித்தார்கள் என கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.