விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் காவிரி தாய்க்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி
திருச்சி, ஆக.4 திருச்சி மாவட்டம் விசுவ ஹிந்து பரிஷத் சாபிர்பில் 6ஆண்டுகளாக திருச்சி காவிரி தாய்க்கு அடி பெருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்படி அடிப்பெருக்கான இன்று காவிரி தாய்க்கு சீர் வழங்கும் நிகழ்ச்சி,ஓடத்துறை அருகே உள்ள தென்கரை,அம்மாமண்டபம் அருகே வடகரை,என 2 இடங்களில் நடந்து வழக்கறிஞர் திருமதி மகேஸ்வரி வையாபுரி, திரு ராஜீ ஆகியோர் தலைமை வகித்தார் சேவா பாராதி மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திரு.இளங்குமார்சம்பத்,சாதனா அறக்கட்டளை அறங்காவலர் திரு.ஜெம்புநாதன் ஆகியோர் சிறப்புரை வழக்கினார் இதில் விசுவ ஹிந்து பரிஷ்த்தின் மவட்ட தலைவர் ராஜகோபல் சர்மா,மாவட்ட செயலாளர் என்.ஆர்.சீனிவாசன்,மாவட்ட துணை தலைவர்கள் கோபு,ஜெயந்தி சங்கர், மாவட்ட இணைச்செயலாளர் விஜயகுமார்,மாத்ருசக்தி பொறுப்பார் லட்சுமிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள அன்னதான சத்திரத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் ஓடத்துறை தென்கரையில் முடிந்தது.பின்னர் மங்கள பொருட்கள் அடங்கிய சீர் வரிசை கொடுக்கப்பட்டது மங்கள்,குங்கும்ம்,சந்தனம்,நவதானியங்கள், பட்டுப் புடவை வளையில் உள்ளிட்ட ஆபரணங்கள் மற்றும் அரிசி,காய்கறிகள்,பழங்கள் போன்நவற்றை காவிரித்தாய்க்கு சமர்ப்பத்தனர்,
மாவட்ட பொறுப்பாளகள் செந்தில்நாதன்,சுந்தரேசன், ப்ரகண்ட பொறுப்பாளர் தனசேகர், மணிகண்ணன்,நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்