காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா
திருச்சி, ஆக.3 காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் திருச்சி இன்று ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆடிப்பெருக்கு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்பத்திற்கு வந்து புனித நீராடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். கரைபுரண்டு ஓடும்புதுவெள்ளத்தில் கால்களை வைத்து காவிரித் தாயை வேண்டிய பூக்களையும், மங்களப் பொருட்களையும் ஆற்றில் மிதக்க விட்டு வழிபாடு செய்வது அளப்பரிய மகிழ்ச்சியை தரும். ஆனால் இந்த ஆண்டு கண் எட்டும் தூரம் வரை வெறும் மணல் பரப்பாகவே காட்சியளிக்கிறது என்று கூறினார்.
மாநகராட்சி சார்பில் காவிரி ஆற்றில் பக்தர்கள் நீராட குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள், மற்றும் புதுமண தம்பதிகள் வருகையும் குறைவாக உள்ளது.