சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

0 240
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 26  சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டம் துறையூரில் பள்ளி மாணவ மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

துறையூர் பேருந்து நிலையத்தில் துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை துறையூர் நகர மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் துறையூர் நகராட்சி ஆணையர் சுரேந்திர சா ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.இப்பேரணி பேருந்து நிலையத்தில் துவங்கி திருச்சி சாலை வழியாக காவல் நிலையம் வரை நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவர்கள் போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் ஆளாகாமல் தடுத்து நிறுத்துவேன் போதைப் பொருளின் உற்பத்திக்கு எதிராக தடுப்பு நடவடிக்கையில் மூலம் தமிழக அரசுக்கு துணை நிற்பேன் உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். பேரணிக்கு முன்னதாக பள்ளி மாணவ மாணவர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.