தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 10 லட்சம் மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையரிடம் புகார்

0 447
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 26  திருச்சியில் தீபாவளி சீட்டு நடத்தியவர் 10 லட்சம் ரூபாயுடன் தலைமறைவு – பணத்தை மீட்டு தர கோரி பாதிக்கப்பட்டோர் காவல் ஆணையரிடம் புகார்

திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் திருச்சியில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களாக அதே பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளார். மாதம் 500 ரூபாய் வீதம் 12 மாதத்திற்கு 6000 ரூபாய் கட்டினால் சீட்டின் முடிவில் போனஸ் ஆக ஆயிரம் ரூபாய் சேர்த்து 7000 ரூபாய் தருவதாக கூறினார். இதை நம்பி அந்தப் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சீட்டில் இணைந்துள்ளனர். இவர் கூறியபடி கடந்த மூன்று வருடங்களாக சீட்டு சேர்த்து பணம் கொடுத்து வந்தார். ஆனால் கடந்த எட்டு மாதங்களாக பணம் எதுவும் தராமல் தலைமுறைவாகியுள்ளார். இதுகுறித்து அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணத்தை தருமாறு கேட்டபோது எங்களிடம் போலீஸ் உள்ளது உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என எங்களை மிரட்டுகிறார்கள்.

இவரை நம்பி 150-க்கும் மேற்பட்டோர் சீட்டில் சேர்ந்து 10 லட்சத்திற்கும் மேல் இழந்துள்ளோம்.

எனவே எங்கள் பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்டோர் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இடம் புகார் மனு அளித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.