வாசவி கிளப் திருச்சி யுனிவர்ஸ் சார்பில் நடைபெற்ற “கருடா” வட்டார மாநாடு

0 322
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 1 ஆர்ய  வைசிய சமூகத்தினரால் நடத்தப்படும் வாசவி கிளப் உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. ஆந்திரா மாநிலத்தில் அதிகளவில் உள்ளது. இச்சங்கத்தின் முக்கிய நோக்கம் சமூகசேவை. அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூகசேவை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ‘கருடா’ வட்டார மாநாடு திருச்சி வாசவி மகால், மினி ஹாலில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வாசவி கிளப் திருச்சி யுனிவர்ஸ் தலைவர் பி.வெங்கடேசன் தலைமை வகித்தார். இம்மாநாட்டில் வட்டாரம் வாரியாக பிரிக்கப்பட்ட சங்கங்களின் பணிகளை சிறப்பித்து, அவர்கள் செய்து வரும் பல்வேறு பணிகளை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சர்வதேச திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் மற்றும் தமிழ்நாடு ஆர்ய வைசிய மகாசபா மாநில துணைத் தலைவர் மதுரை கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். வட்டாரத் தலைவர் சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட சங்கங்களுக்கு விருதுகள் வழங்கினார்.

நிகழ்ச்சி நிறைவாக வாசவி கிளப் திருச்சி யுனிவர்ஸ் சங்க செயலாளர் டி.சுரேஷ் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.