திருச்சி மாநகராட்சியுடன் சோமரசம்பேட்டையை இணைக்க எதிர்ப்பு
திருச்சி, ஜூலை 1 திருச்சி மாநகராட்சியுடன் சோமரசம்பேட்டையை இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருச்சி மாநகராட்சி நூறு வார்டுகளாக மாற்றும் திட்டத்தில் சோமரசம்பேட்டை ஊராட்சியை மாநகராட்சி உடன் இணைப்பதற்கு மக்களுடைய கருத்தை கேட்காமல் முடிவெடுக்கக் கூடாது என்று சோமரசம்பேட்டை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகநீதி பேரவை சார்பில் தலைவர் ரவிக்குமார் மற்றும் சம்சுதீன் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது