மணப்பாறையில் தலித் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0 377
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 8 பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர்  ஆம்ஸ்ட்ராங்-கை  படுகொலை செய்த சமூக விரோதிகளை, உண்மையான குற்றவாளிகளை காவல்துறை கைது செய்ய வலியுறுத்தி  திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேருந்து நிலையம் எதிரில் தலித் கூட்டமைப்பு சார்பில்நேற்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர்  ந. மதனகோபால் தலைமையில் , சின்ன கண்ணு டாஸ்மாக், CPI (ML) நகரச் செயலாளர் தோழர் P பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் வேலு.பிரகாஷ் ராவணன் & சித்தாநத்தம் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆதி திராவிடர் நல பேரவை நிறுவனத் தலைவர் ஆதி.பெரு. பழனியப்பன்  கண்டன உரையாற்றினார்.
இதில்  செங்குட்டுவன், ஆதி திராவிடர் நல பேரவை மணிவண்ணன் ஆதிதிராவிடர் நலப் பேரவை தலைவர் வழக்கறிஞர் S P சதாசிவம்,  CPI (ML) மாநில குழு உறுப்பினர் வழக்கறிஞர் S ராஜ்குமார்,
விசிக பொறுப்பாளர் ராஜேந்திரன்,  தங்க ராஜ்.வெள்ளகண்ணு,  CPI (ML) ஒன்றிய செயலாளர் தங்கராஜ்,  ரயில்வே பெருமாள்,  மருதை.. ஆகியோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.